குந்துகால் துறைமுக பகுதியில் ஹெலிகாப்டரில் கடலோர காவல்படையினர் ஒத்திகை

குந்துகால் துறைமுக பகுதியில் ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-07-10 16:45 GMT

கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டரில் குந்துகால் துறைமுக பகுதியில் ஒத்திகை நடத்தப்பட்டது

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மூழ்கும் சூழ்நிலையில் சில மீனவர்கள் நீந்தி கரைக்கு வந்து விடுகின்றனர். சில மீனவர்கள் கடலிலே சிக்கிக்கொள்கின்றனர். மீனவர்களை காப்பாற்றுவதற்காக இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர காவல் குழும போலீசார் ஹெலிகாப்டர் மூலமாக மீனவர்களை தேடிச் சென்று மீனவர்களை காப்பாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பாம்பன் அடுத்துள்ள குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் இன்று கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ஒத்திகை நடத்தப்பட்டது. நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை அவசர கால சூழ்நிலையில் மீட்டுக் கொண்டு மீன்பிடி துறைமுகம் அருகிலேயே ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கு குந்துகால் பகுதி ஏற்றதாக இருக்குமா என்பது தொடர்பாக இந்திய கடற்படையின் கமாண்டர் வெங்கடேஸ் ஐயர் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், இந்திய கடலோர காவல் படையின் சார்பாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அதே போல தற்போது குந்துகால் துறைமுக பகுதியில் இரண்டு ரோந்து கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News