முப்படை தளபதி மறைவுக்கு அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படையினர் அஞ்சலி

இராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர்கள் படையினர் முப்படை தளபதி மறைவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2021-12-09 11:46 GMT

இராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர்கள் படையினர் முப்படை தளபதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர்கள் படையினர் முப்படை தளபதி மறைவுக்கு அஞ்சலி.

இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில், நேற்று நடந்த  விமான விபத்தில் வீர மரணமடைந்த முப்படை தளபதி உள்பட 13 வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். சூலூரிலிருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு எம்ஐ ரக ஹெலிகாப்டரில் அவர்கள் சென்றனர். அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் பனிப்பொழிவு காரணமாக திடீரென விபத்தில் சிக்கியதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ராணுவ உயர் அதிகாரியின் மறைவுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள், கட்சித் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில், மறைந்த முப்படை தளபதி மற்றும் இதர வீரர்களுக்கு  வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

இதில், கல்லூரி முதல்வர் முனைவர் கணேசன் மற்றும் மூத்த பேராசிரியர் முனைவர் செந்தாமரை, அனைத்து பேராசிரியர்களும் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் டாக்டர் உத்திர செல்வம் செய்திருந்தார்.

Tags:    

Similar News