தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: பாம்பன் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை

வட மேற்கு வங்ககடலில்; புயல் உருவாகி உள்ளதால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை

Update: 2021-07-22 12:56 GMT

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட மேற்கு வங்க கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தனுஷ்கோடி தெற்கு கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வட மேற்கு வங்க கடலில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதி வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மீன்வளத்துறையால் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் உள்ள தடுப்பு சுவற்றில் கடல் சீற்றம் காரணமாக கடல் அலைகள் மோதி 5 முதல் 6 அடி உயரம் வரை உயர்ந்து வருகிறது. மேலும், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கம்பிபாடும் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருவதால்; இருசக்கர வாகனங்கள் தனுஷ்கோடி செல்லும் வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்க முடியவில்லை. வட மேற்கு வங்ககடலில்; புயல் உருவாகி உள்ளதால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மீனவர்களின் விசைப்படகுகள் கடற்கரையில நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News