ராமேஸ்வரத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு காவல்துறை சார்பில் உணவு

ராமேஸ்வரத்தில் முழு ஊரடங்கால் பசியில் வாடும் யாசகர்களுக்கு காவல்துறை சார்பில் உணவு வழங்கப்பட்டது.

Update: 2022-01-09 11:00 GMT

ராமேஸ்வரத்தில் சாலையோரம் படுத்து இருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் மற்றும் ஆன்மிக தலமாக இருப்பதால் நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்து வரும் ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும், ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட்|டு செல்கின்றனர் .ராமேஸ்வரம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களை நம்பி யாசகம் பெற்று திருக்கோவில் நான்கு ரத வீதி மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு காரணமாக சாலை ஓரம் வசிப்பவர்கள் மற்றும் யாசகம் பெற்று வாழ்பவர்கள் உணவு கிடைக்காமல் சாலையின் பல்வேறு இடத்தில் படுத்துள்ளனர்.

அவர்களைத் தேடிச் சென்ற ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய காவலர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் கொண்ட குழு உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு அளித்தனர்.அதே போல் இன்று முழு ஊரடங்கால் மதியம், இரவு உள்ளிட்ட மூன்று வேளையும் உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரத்திற்கு கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யவும், ராமேஸ்வரம் மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய ராமேஸ்வரத்தில் இயங்கி வரும் உணவகங்களில் பார்சல் சேவை வழங்கப்பட்டு வருகிறது.உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உணவு பார்சல் வாங்க வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் தெரிவித்ததையடுத்து உணவு வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பார்சல் வாங்கிச் செல்கின்றனர்.

Tags:    

Similar News