இன்று முதல் தொடங்குகியது மீன்பிடித் தடைக்காலம்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் தொடங்கியது

Update: 2021-04-15 15:58 GMT

தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்கு படுத்தும் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைக்காலம் அறிவிக்கபட்டு விசைப்படகுகள் மட்டும் இழுவைப் படகுகளை கொண்டு மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள சுமார் 1600 க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் தொழிலில் நேரடியாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும் சார்பு தொழிலாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் இந்த 61 தடை காலத்தில் தங்களது படகுகளை சரிபார்த்தல், வலைகள் பின்னுதல் மற்றும் படகுகளை சீரமைப்பில் தீவிரம் காட்டி வரும் வருவார்கள்.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் தொடங்க இருக்கும் மீன் பிடி தடைக்காலத்தில் தங்கள் படகுகளில் உள்ள மீன் பிடி வலை மற்றும் உபகரணங்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த வருடம் மீன்பிடித் தடை காலத்தின் போது தமிழக அரசு வழங்கக்கூடிய நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News