இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை. மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன் அறிவிப்பு.

Update: 2021-10-13 16:02 GMT

இராமநாதபுரம். மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன்.

இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை. மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன் அறிவிப்பு.

இன்று தெற்கு வங்காள விரிகுடா, தென்கிழக்கு அரபிக் கடல், இலட்சத் தீவு, அந்தமான் கடற்பகுதி மற்றும் கேரள கடற்பகுதிகளில் 40-50 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், நாளை மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, கேரள கடற்பகுதி, இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், 15, 16 ஆகிய இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரி கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக் கடல், இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News