நாளை முதல் ஒரு வாரம் வேலைநிறுத்தம்: இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என, அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Update: 2021-09-26 12:15 GMT

இராமேஸ்வரத்தில், அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று,  மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். வருடந்தோறும் மீன்வளத்துறை சார்பில் படகுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.

கடந்த ஒரு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக,  படகுகளை ஆய்வு செய்யப்படாமல் இருந்து வரும் நிலையில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு, 3 விசைப்படகுகள் அரசு அனுமதி இல்லாமல் வந்து உள்ளதால் அதனை அப்புறப்படுத்த மீனவ சங்கங்கள்,   அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் மற்ற துறைமுகங்களில் ஆய்வு நடத்தும் போது இராமேஸ்வரம் துறைமுகத்திலும் விசைப்படகுகளை ஆய்வு நடத்த வேண்டும் எனவும், புதிதாக இராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திற்கு வந்திருக்கும் 3 விசைப்படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரியும்,  நாளை முதல் அக்டோபர் 1ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, இராமேஸ்வரம் அனைத்து மீனவர் விசைப்படகு சங்கம் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News