நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி தர்ணா

இராமநாதபுரத்தில், நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தி, ஒப்பந்தக்காரர்,வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-14 08:45 GMT

நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்குக் கொண்டுவரக்கோரி, இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மீன் வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரத்தில் நகராட்சி நிர்வாகத்தால்,  புதிய பேருந்து நிலையம் அருகே, நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டு,  கடந்த 14.07.2021 அன்று சார்பில் திறக்கப்பட்டது. தெருக்களிலும், அனுமதியற்ற மீன் அங்காடிகளிலும் மீன் விற்பனை செய்யக்கூடாது என்றும், புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மீன் மார்க்கெட்டில் மட்டும்தான் மீன் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் நகராட்சி அறிவிக்கப்பட்டது.

ஆனால், தனியார் மீன் அங்காடிகளின் கட்டுப்பாடுகளால் மீன் வியாபாரிகள் அங்கு செல்ல தயங்கியதாக கூறப்படுகிறது. இதனால், மீன் மார்க்கெட் திறக்கப்பட்ட ஓரிரு வாரத்திலேயே செயலிழந்தது. இந்நிலையில் வருடத்திற்கு ரூ 46 லட்சத்திற்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரும்,  அங்கு மீன் விற்பனை செய்வதற்காக சென்ற சில மீன் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, புதிய நவீன மீன் அங்காடியை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும், இதனை செய்யத் தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஒப்பந்ததாரர் சசிகுமார் மற்றும் மீன் வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர், இராமநாதபுரம்  நகராட்சி அலுவலகத்தை, இன்று முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News