இராமேஸ்வரம் அருகே மீன் வண்டி டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து

மீன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்.

Update: 2021-12-15 11:29 GMT

மீன் ஏற்றி சென்ற மீன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்பட்டது.

மீன் ஏற்றி சென்ற மீன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளீனர் இருவரும் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சேர்ந்தவர் மீன் வியாபாரி சண்முகம். இவர் வெளியூரில் ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றை வாங்கி மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை உள்ள வேர்கோடு பகுதியில் உள்ள மீன் கம்பெனிகளுக்கும், இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தேவையான ஐஸ் பொருட்களை ஏற்றி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே இருசக்கர வாகனம் ஒன்று அதே போல் அதி வேகமாக சரக்கு வாகனத்தை நோக்கி வேகமாக வருவதை கண்ட சரக்கு வாகன ஓட்டுநர் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டுனர் வாகனத்தை திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் அருகே இருந்த டிரான்ஸபார்மர் மீது மோதியது. இதில் டிரைவர் காயம் மற்றும் கிளீனர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் சிகிகச்சைக்காக இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் வேர்கோடு, கரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் மின் இணைப்பு இல்லாததால் இந்த விபத்தின் போது இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து துறைமுக காவல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News