இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-12-16 08:13 GMT

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இராமேஸ்வரம் ரயில்வே நிலையத்தில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதில், ரயில்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் தீ விபத்து ஏற்படும் போது, பல்வேறு முறையில் தீயை அணைப்பது குறித்து, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

ராமேஸ்வரம் உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் முக்கியமான சுற்றுலாத் தலம் என்பதால் தினசரி ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர். எனவே ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் எளிதில் தீ பற்ற கூடிய இடங்களான ரயில் இன்ஜின்கள் பராமரிக்கும் இடத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே போலீசார் கலந்து கொண்டு ரயில்வே ஊழியர்களுக்கு தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் அதனை எப்படி கையாள்வது, வீடு, ரயில், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் தீத்தடுப்பு கருவியை கையாளும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் இரயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News