இ- பாஸ் இல்லாத சுற்றுலாபயணிகள் தடுத்து நிறுத்தம்

Update: 2021-04-13 11:15 GMT

இராமேஸ்வரத்தில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் முழு பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். இ பாஸ் இல்லாத சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ளதால் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டுமென சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் இராமேஸ்வரம் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டு மாஸ்க் அணிந்துள்ளனரா என கண்காணிக்கப்படுகிறது.

மாஸ்க் அணியாத சுற்றுலா பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் பைக்குகளில் வருவோர், மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா, கேரளாவில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ பாஸ் வைத்திருப்பவர்கள், மட்டுமே இராமேஸ்வரத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இ பாஸ் இல்லாத சுற்றுலாப் பயணிகளை சுகாதாரத்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News