மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் திமுகவினர் இனிப்பு மற்றும் உணவு வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-03-01 09:27 GMT

இனிப்புகள் மற்றும் உணவு வழங்கி கொண்டாடிய இராமநாதபுரம் நகர் திமுகவினர்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனையடுத்து இராமநாதபுரம் நகர் செயலாளர் கார்மேகம் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவுகள் வழங்கினர்.

இதேபோல் அக்ரஹாரம் தெருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் திமுக மகளிர் அணி துணை தலைவியும், தமிழக மகளிர் ஆணைய உறுப்பினருமான பவானி ராஜேந்திரன் தலைமையில் ஈஸ்வர பிரசாத் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.

Tags:    

Similar News