இராமநாதபுரம் நகராட்சியில் 2-வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

இராமநாதபுரம் நகராட்சியில் 2-வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-02-08 01:11 GMT

இராமநாதபுரம் நகராட்சியில் 2 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தேர்தல் அலுவலர் சந்திரா இருவருக்கும் சான்றுகளை வழங்கினார்.

இராமநாதபுரம் நகராட்சியில் 2-வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை முடிவு பெற்று இன்று வாபஸ் பெறப்பட்டது. வேட்புமனு பரிசீலனையின் போது 7 வது வார்டு அதிமுக வேட்பாளர் சோமசுந்தர பாண்டியன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் இன்று 29 வது வார்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மீனாட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆனந்தி ஆகிய இருவரும் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால், திமுக வேட்பாளர் ஆர்.கே.கே காயத்ரி கார்மேகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இராமநாதபுரம் நகராட்சியில் 2 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இராமநாதபுரம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரா இருவருக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றுகளை வழங்கினார். இந்த வெற்றியை இராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News