இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

Update: 2021-11-25 16:37 GMT

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

வங்க கடலில் தெற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதால் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வரை லேசான மழை பெய்த நிலையில் முன்தினம் இரவு முதல் பலத்த மழையாக பெய்து வருகிறது. சில நேரம் சாரல் மழையாகவும், இரவு நேரங்களில் கனமழையாகவும் பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட புறநகர் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் செல்ல வழி இல்லாததாலும் நீர்வழிபாதைகளை நிரப்பி வீடுகள் கட்டி உள்ளதாலும் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த மழைநீரில் வேறுவழியின்றி நடந்து சென்று பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News