இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை.

Update: 2021-07-12 14:36 GMT

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை.

இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து இன்று மாலை தனுஷ்கோடி அருகே உள்ள சேராங்கோட்டை கடற்கரைப்பகுதியில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடலில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனை செய்தனர். படகில் சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டுப்படகையும், அதில் இருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், படகை ஓட்டி வந்த இராமேஸ்வரம் இந்திரா நகரைச் சேர்ந்த லிங்கநாதன் என்பவரை கைது செய்து மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News