ராமநாதபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து குறி சொல்லும் நவீன கருப்பசாமி

சாமி சொன்னா சரியாத்தான் இருக்கும் - கொரோனா விழிப்புணர்வு குறித்து நவீன கருப்பசாமி குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-06-09 15:18 GMT

கொரோனா விழிப்புணர்வு குறித்து குறி சொல்லும் நவீன கருப்பசாமி

இராமநாதபுரத்தில் நவீன கருப்புசாமி குறி சொல்லி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கருப்பசாமி வேடமணிந்து குறி சொல்வது போன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாதனேந்தல் ராஜேந்திரன் கருப்பசாமியாக வேடமணிந்து குறி சொல்லி மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற இரவு,பகல் பாராது பணியாற்றிவரும் மருத்துவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார், சார் ஆட்சியர் சுகபுத்ரா, காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்தி, மாவட்ட ஊராட்சி குழு கூட்டமைப்பு நிர்வாகிகள், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டி மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News