ராமேஸ்வரம் பகுதியில் தொடர் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

ராமேஸ்வரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2022-04-11 13:14 GMT

கனமழையால் சாலையில் தேங்கிய மழை நீர்.

ராமேஸ்வரத்தில் நேற்று முதல் மேகமூட்டமாக இருந்த நிலையில், காலையில் இருந்து தொடர்ந்து பல மணி நேரத்துக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. இதனால் சாலைகளின் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதியுற்றனர்.

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து இல்லாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், பகுதியில் அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.மழைநீர் தேங்கியுள்ள மழை நீரால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க ராமேஸ்வரம் நகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News