ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக சந்திரகலா பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய கலெக்டராக சந்திரகலா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2021-06-18 08:15 GMT

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட சந்திரகலா.

ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக சந்திரகலா நேற்று அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தில் இன்று 24 வது ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு முழுமையாகச் சென்றடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்படும்.
குறிப்பாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாகவும், அதற்கடுத்தபடியாக மீன்பிடித்தொழில் முக்கிய தொழிலாகவும் இருந்து வருகிறது.
விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தை பொருத்தவரையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும், சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் மற்றும் குதிரைமொழி ஆகிய பகுதிகளில் கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி இத்திட்டப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்துத் அரசுத் துறை அலுவலர்களையும் ஒறுங்கிணைத்து, மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News