இராமநாதபுரத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆட்சியர், எஸ்.பி ஆய்வு

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி தலைமையில் அதிகாரிகள் குழு, பொதுமக்கள் கூடும் இடங்கள்,பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-01-06 01:00 GMT

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் குழு, பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர், சுகாதாரத்துறை குழு, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்படி, பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், உணவு விடுதிகள், சாலையோர கடைகள், வாகன ஓட்டிகள், பயணிகள் உள்ளிட்டோர்களிடம் கொரோனா தொற்றின் தாக்கத்தையும், அதனை எதிர்கொள்ள மக்கள் போதிய விழிப்புணர்வுடனும், பாதுகாக்கப்பாகவும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு செய்தனர்.

அதேபோல வாகன ஓட்டிகள், நடத்துனர் ஆகியோரிடம்,  பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருந்திருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், கைகளை கிருமி நாசினி மூலம் கழுவி சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 50% பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல அனைவரும் தடுப்பூசிகளை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறும், செலுத்தாதவர்கள் சிறப்பு தடுப்பு ஊசி முகாம்களில் செலுத்திக் கொள்ளும் மாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல தாங்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் வசிக்கும் பகுதிகளை சுத்தமாகவும், பாதுகாப்போடும் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News