7 வது தேசிய கைத்தறி கண்காட்சியை ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்

ராமநாதபுரத்தில் 7 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-07 17:20 GMT

ராமநாதபுரத்தில் 7 வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி  கலெக்டர் சந்திரகலா கைத்தறி கண்காட்சியை துவக்கி வைத்தார்.

7 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று கைத்தறி தினம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா கண்காட்சியை துவக்கி வைத்தார்.

பின்பு பரமக்குடி கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இக் கண்காட்சி விற்பனை நடைபெறும்.

மேலும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டபோது, கண்காட்சியில் கைத்தறி கண்காணிப்பாளர் மோகனா, மாவட்ட ஆட்சியரிடம் கைத்தறித் துணி ரகங்களான பம்பர் காட்டன் சேலைகள், காட்டன் சேலைகள், 1000 புட்டா காட்டன் சேலைகள், அருப்புக்கோட்டை லுங்கிகள், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், வேட்டிகள் போன்றவை பற்றி விளக்கி தரத்தை எடுத்துரைத்தனர்.

பின்னர் கைத்தறி நெசவாளர்களுக்கு 3.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், கைத்தறி உதவி இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News