தனுஷ்கோடி மூடல்; சுற்றுலாப்பயணிகள், மீனவபெண்கள் அவதி

முன்னறிவிப்பின்றி தனுஷ்கோடி மூடப்பட்டபட்டதால், சுற்றுலா பயணிகள், மீனவ பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Update: 2021-07-22 13:37 GMT

தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடிக்க செல்ல முடியாமல் காத்திருந்த பெண்கள்.

கடற்படை அதிகாரி குடும்பத்துடன் தனுஷ்கோடி வந்ததையடுத்து முன்னறிவிப்பின்றி சாலையை மூடிபோக்குவரத்தை நிறுத்தியதால் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கடற்படையின் வைஸ் அட்மிரல் ஜெனரல் ஏ.பி. சிங், தனது மனைவியுடன் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி சுற்றி பார்க்க சென்றார்.

பாதுகாப்பு கருதி முன்னறிவிப்பின்றி இராமேஸ்வரம் அடுத்த புதுரோடு பகுதியில் போலீசார் தடுப்பு வைத்து போக்குவரத்துக்கு தடை செய்தனர். இதனால் தனுஷ்கோடி சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் தங்களது கார்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதேபோல், தனுஷ்கோடி பகுதியில்  மீனவப் பெண்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் காத்திருந்தனர். பின்னர் போக்குவரத்து தடை செய்ததற்கான காரணம் கேட்ட போது போலீசார் முறையான பதில் அளிக்காததால் மீனவப் பெண்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News