இராமநாதபுரம் அரண்மனை முன்பு சிஐடியுவினர் தெருமுனை பிரச்சார இயக்கம்

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இராமநாதபுரம் அரண்மனை முன்பு தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

Update: 2021-11-10 12:33 GMT

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இராமநாதபுரம் அரண்மனை முன்பு தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. 

இராமநாதபுரம் அரண்மனை முன்பு தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

இந்தியாவை பாதுகாப்போம் பொதுத்துறையை பாதுகாப்போம் என்ற கோஷத்தோடு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இராமநாதபுரம் அரண்மனை முன்பு தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரசார இயக்கத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அய்யாதுரை தலைமை தாங்கினார். பிரச்சாரத்தை துவக்கி வைத்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மதுரை கோட்ட துணைச் செயலாளர் தணிகைராஜ் துவக்கி வைத்தார்.

பிரச்சாரத்தை விளக்கி விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீ.மயில்வாகனன், இராமநாதபுரம் மாவட்ட விவசாய சங்க மாவட்ட தலைவர் எம். முத்துராமு, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் முத்துப்பாண்டி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கலையரசன், குடிநீர் வடிகால் வாரியம் மாவட்ட செயலாளர் மலைராஜன், லோடுமேன் சங்க மாவட்ட தலைவர் பூமிநாதன், போக்குவரத்து கழக துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பரமக்குடி கிளை செயலாளர் ரவி, CITU செயலாளர் அண்ணாதுரை, தனியார் மோட்டார் வாகன சங்க செயலாளர் ஆனந்த், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பால்ராஜ் உட்பட 75 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பிரச்சாரத்தை நிறைவு செய்து வைத்து சிஐடியு மாவட்ட செயலாளர்எம். சிவாஜி உரையாற்றினார். முத்துப்பாண்டி நன்றி கூற பிரசாரம் நிறைவு பெற்றது.

Tags:    

Similar News