350 கிலோ கடல்அட்டைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி: இந்திய கடலோர காவல் படை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை.

Update: 2022-05-21 03:28 GMT

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை.

தமிழகத்தில் தற்போது 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால், நாட்டுப்படகு மீனவர்கள் கரை ஓரத்தில் இருந்து ஐந்து நாட்டிக்கள் தூரம் வரை சென்று மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து, அதனை பதப்படுத்தி சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தி வருவதாக இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்தது.

நேற்று இரவு இராமேஸ்வரம் அடுத்த சேராங்கொட்டை கடற்கரைப் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் கடல் அட்டைகள் மூட்டை மூட்டையாக கட்டிக் எடுத்து சென்றபோது இந்திய கடலோர காவல்படை வீரர்கள் மாட்டு வண்டி மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவல் படையினரால் ஒப்படைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாம்பன் அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான கடற்கரை மணலில் புதைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News