இராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

இராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கட்டு கட்டாக பணத்தை கைபற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார். சார்பதிவாளரிடம் தீவிர விசாரணை.

Update: 2021-10-01 07:27 GMT

இராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சாேதனை நடத்தினர்.

இராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கட்டு கட்டாக பணத்தை கைபற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார். சார் பதிவாளரிடம் தீவிர விசாரணை.

இராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இடைத்தரகர்கள் அதிகமாக நடமாடுவதாகவும், பத்திர பதிவு உள்ளிட்ட வேலைகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துனை காவல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து அலுவலக கதவை பூட்டி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அலுவலகத்திற்குள் இருந்த ஒரு புரோக்கர் சிக்கினார். மேலும் உள்ளே இருந்த பொதுமக்களை விசாரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சோதனையில் பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தனர். பின்னர் சார்பதிவாளர் இளங்கோவன் மற்றும் அலுவலக உதவியாளர் அன்புராஜ் ஆகியோரது மேஜைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சார்பதிவாளர் இளங்கோவனிடம் ரூபாய் 50 ஆயிரம், அலுவலக உதவியாளரிடம் ரூபாய் 3 ஆயிரம் மற்றும் நில புரோக்கர் பாலசுப்பிரமணியனிடம் ரூபாய் 4 லட்சத்தி 70 ஆயிரம் என மொத்தமாக 5 லட்சத்தி 23 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதில் நில புரோக்கரிடம் இருந்த ரூபாய் 4 லட்சத்தி 70 ஆயிரத்திற்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. எஞ்சிய ரூபாய் 53 ஆயிரத்திற்கு கணக்கு கேட்டு சார் பதிவாளர் இளங்கோ, அலுவலக உதவியாளர் அன்பு ராஜ் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் இராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் மொத்தமாக ரூபாய் 1 லட்சத்தி 58 ஆயிரத்தி 70 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் பத்திர பதிவுக்கு கூடுதலாக பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News