திமுக அரசைக் கண்டித்து மழையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சொத்து வரி உயர்வை கண்டித்து இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு மழையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-05 14:00 GMT

சொத்துவரி உயர்வு மற்றும்  நலத்திட்ட உதவிகளை ரத்து செய்ததை கண்டித்து அதிமுகவினரின் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு சொத்துவரி உயர்வு மற்றும் அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகளை ரத்து செய்ததை கண்டித்து மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கண்டன உரையாற்றினார். தேர்தல் நேரத்தில் திமுக பொதுமக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று தெரிவித்து அதிமுகவினர் தற்போது திடீரென 150 மடங்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளது கண்டிக்கத்தக்கது.

அதேபோல அதிமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரத்து செய்ததை கண்டித்து 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பதாகைகளுடன் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News