திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-02-28 05:30 GMT

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ததை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் முறைகேடு புரிந்ததாகவும் கூறி, திமுக அரசினை கண்டித்து, அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில்,  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர், இராமநாதபுரம் பாரதி நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில், திமுக அரசுக்கு  எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News