அதிரடி சோதனை: உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் சவர்மா, கோழிக்கறி பறிமுதல்

உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனையின் போது, இராமநாதபுரம் மாவட்ட உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் சவர்மா பறிமுதல்.

Update: 2022-05-07 09:52 GMT
இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் அறிவுறுத்தலை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி தர்மர் தலைமையில் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தேவிபட்டினம் சாலை, சின்னக்கடை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் பகுதியில் சவர்மா, கெட்டுப்போன கோழிக் கறிகளையும் உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து கடை உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டனர். கேரளாவில் பெண் ஒருவர் சவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மற்றும் சோதனை நடத்தி அழுகிய பொருட்களை பறிமுதல் செய்தனர். கெட்டுப்போன உணவு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News