எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்தவருக்கு 2ஆண்டு சிறை தண்டனை

இலங்கைக்கு சயனைடு குப்பி கடத்த முயன்ற வழக்கில் எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்தவருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.

Update: 2021-10-28 16:15 GMT

பைல் படம்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த எல்டிடிஇ அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து சுமார் 75 சயனைடு குப்பிகள் மற்றும் சயனைடு பவுடர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற போது ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீசார் உச்சிப்புளியில் வைத்து கிருஷ்ணகுமார், சசிகுமார், ராஜேந்திரன், சுபாஸ்கரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் தப்பி ஓடிய முருகன், குமரன், உதயகுமார்(37) என்பவரை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வைத்து கியூ பிரிவு போலீசார் கடந்த 2017-ல் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவர் இதுவரை 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தீர்ப்பளித்துள்ளார். இவர் மீது இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது போலியான பெயரில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் துவக்கியது, மற்றும் ஆதார் கார்டு வாங்கியது, சிம்கார்டு வாங்கியது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News