இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது

இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள் 2 பேரை இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலமாக விரட்டிப் பிடித்தனர்.

Update: 2021-03-11 04:58 GMT

இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள் 2 பேரை இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலமாக விரட்டிப் பிடித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் விமானப்படை தளத்தில் இருந்து இன்று காலை சேட்டக் ஹெலிகாப்டரில் இந்திய கடற்படை வீரர்கள் தனுஷ்கோடி கடல் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்த இலங்கை படகை கண்டதுடன் படகை நிறுத்தும் படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இலங்கை மீனவர்கள் ஹெலிகாப்டரில் இருந்த இந்தியக் கடற்படை வீரர்களின் எச்சரிக்கையை மீறி இலங்கை கடல் பகுதிக்குள் அதிவேகமாக செல்ல முற்பட்டபோது அந்தப் படகை ஹெலிகாப்டரில் இருந்து மிகவும் தாழ்வாக பரந்த வாறு துப்பாக்கி முனையில் அவர்களை தனுஷ்கோடி அரிச்சல் முனை கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். அதன்பின் தனுஷ்கோடி மரைன் போலீசாரிடம் படகையும் அதிலிருந்த இரண்டு மீனவர்களையும் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மீன் பிடிப்பதற்காக மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் 4 மீனவர்கள் வந்ததாகவும் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீன்பிடி வலையும் மற்றொரு படகு காணாமல் போனதால் அந்தப் படகை தேடி வந்த போது திசைமாறி இந்திய கடல் பகுதிக்குள் வந்து விட்டதாகவும், அப்போது ஹெலிகாப்டர் வருவதை அறிந்து மீண்டும் இலங்கை பகுதிக்குள் செல்ல முற்பட்டபோது தாங்கள் சிறைபிடிக்கப்பட்ட தாகவும் தெரிவித்தனர். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு பேரும் மன்னார் மாவட்டம் பேசாலை எட்டாம் வட்டாரம் அருள்குரூஸ்,ரேகன் பாய்வா என தெரியவந்துவுள்ளது. இதனையடுத்து கியூ பிரிவு போலீசார் இவர்கள் மீனவர்கள் தானா அல்லது கடத்தலில் தொடர்பு உள்ளவர்களா என விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News