இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை. இரண்டு மீன்பிடி விசைப்படகுகள் அரசுடமை ஆக்கப்பட்டது.

Update: 2022-01-05 12:24 GMT

இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை. இரண்டு மீன்பிடி விசைப்படகுகள் அரசுடமை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 19ஆம் தேதி விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில் சவரிராஜன் மற்றும் அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் சென்ற அந்தோணிராஜ், சாலமன், ஜாக்சன் இந்த 12 மீனவர்களையும் அந்த இரண்டு விசைப்படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் எதை வைத்து கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

மீனவர்கள் வழக்கு கடந்த 3ஆம் தேதி மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது; மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என வழக்கை மீண்டும் 5 ஆம் தேதி வரை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 12 மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்தது, எல்லை தாண்டி மீன் பிடித்தது, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இன்று மீனவர்கள் மீண்டும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார் 12 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீனவர்களது 2 விசைப்படகுகளை அரசுடமையாக்கப்படும் என தீர்ப்பளித்தார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள மெருஹானா முகாமில் தங்க வைக்க அழைத்து செல்லப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News