மறைந்த கலாம் சகோதரர் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

Update: 2021-03-08 06:45 GMT

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம்,முகமது முத்து மீரா மரைக்காயர்மின் சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்தினர்.

இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயரின் உடல் அவரது சொந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் இன்று காலை முதல் உள்ளூர் அரசியல்பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் 11 மணி அளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News