உலக ஓசோன் தினம்: புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடவு

உலகஓசோன் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் காற்றை மாசுபடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது

Update: 2021-09-16 10:23 GMT

உலக ஓசோன் தினத்தையொட்டி புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழா.

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில்புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வளாகங்களில் மரக்கன்றினை நட்டு வைத்தனர்.

உலக ஓசோன் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் காற்றை மாசுபடுத்தும் விதத்தில் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. அனைவரும் மரக்கன்று களை நட்டு காற்றை மாசுபடுத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என உலக ஓசோன் தின விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் எடுத்துக் கூறினர். ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Tags:    

Similar News