நகராட்சி 26 வது வார்டை முன்மாதிரியாக வார்டாக மாற்றுவேன்:அதிமுக வேட்பாளர் உறுதி

பொதுமக்களையும் சிறுவர்களையும் அச்சுறுத்தும் விதமாக சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை

Update: 2022-02-11 11:00 GMT

 நகராட்சி 26 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் துளவத்தாமம் கலியமூர்த்தி தனது வார்டுக்கு உட்பட்ட நிஜாம் காலனியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகளை சேகரித்தார்.

புதுக்கோட்டை நகராட்சி 26 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் துளவத்தாமம் கலியமூர்த்தி தனது வார்டுக்கு உட்பட்ட நிஜாம் காலனியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகளை சேகரித்தார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளுக்கும் வரும் 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.தற்போது களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் துளவத்தாமம் கலியமூர்த்தி இன்று நிஜம் காலனியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகள் சேகரித்தார்.

மேலும் என்னை இந்த தேர்தலில் வெற்றி பெறச் செய்தால், இந்த வார்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம் படுத்துவேன்.தெருக்களில் பொதுமக்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் அச்சுறுத்தும் விதமாக சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். எனது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு எந்த நோயும் ஏற்படாதவாறு சுகாதார வார்டாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என  வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார்.

Tags:    

Similar News