பள்ளி மாணவனிடம் போலீஸ் என கூறி பணம் பறித்த 2 பேர் கைது

புதுக்கோட்டையில் செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களை சைபர் க்ரைம் போலீஸ் என கூறி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-05 10:45 GMT

கைது செய்யப்பட்ட கணேசன்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். அவருடைய செல்போனை ஹேக் செய்த இரண்டு நபர்கள் அந்த மாணவனை தொடர்பு கொண்டு தங்களை சைபர் கிரைம் போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும், ஆபாச படம் பார்த்ததாக கூறி அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்

இதனைத்தொடர்ந்து பயந்துபோன அந்த மாணவர் தனது தந்தையிடம் வேறு காரணங்கள் கூறி 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று அந்த நபர்கள் கொடுத்த கூகுள் அக்கவுண்டில் பண பரிமாற்றம் செய்துள்ளார். அதன் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தெரியவந்தது.

இதுகுறித்து மாணவரின் உறவினர் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து அந்த மாணவனை சைபர் கிரைம் போலீசார் அழைத்து விசாரணை செய்து, மாணவர்களிடம் பேசிய 2 நபர்கள் கூகுள் பே அக்கௌன்ட் நம்பரை வைத்து சோதனை செய்தபோது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் பிரகாஷ் என்பது தெரியவந்தது. 

இதைதொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு சென்ற சைபர் கிரைம் போலீசார் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்தபோது அவர்கள் மாணவனை மிரட்டி பணம் பறித்தது குறித்து ஒப்புக்கொண்டனர். இதுபோல் பல பேரிடம் பணம் வசூலித்தாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News