தபால் ஊழியர்களுக்கு புத்தகம் வழங்கி மகளிர் தின வாழ்த்து கூறிய மரம் நண்பர்கள்

மழை, வெயிலை பொருட்படுத்தாமல், தபால்களை உரியவர்களிடம், உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கும் பெண் தபால்காரர்களை வாழ்த்தினர்

Update: 2022-03-09 09:47 GMT

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் பெண் தபால் கார்களுக்கு சர்வதேச மகளிர்  தினத்தை முன்னிட்டு   புத்தகம் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டிய மரம் நண்பர்கள்

 மரம் நண்பர்கள் சார்பில் பெண் தபால் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தனர்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மகளிர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதேபோல் தமிழ்நாட்டிலும் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில்  மரம் நண்பர்கள் சார்பில்சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மரம் நண்பர்கள்  சார்பில் பெண் தபால்காரர்கள் கௌரவிக்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல், தபால்களை உரியவர்களிடம், உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கும் பெண் தபால்காரர்கள் லட்சுமி, கோமதி, நாகம்மாள், கவிதா, ரம்யா, ராதிகா ஆகியோர் மரம் நண்பர்களால் பொன்னாடை அணிவித்து, புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர். இதில்,  தலைமைத் தபால் அலுவலர் சத்தியமூர்த்தி, மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவர் எட்வின், எஸ். விஸ்வநாதன், செயலர் கண்ணன், இணைச்செயலர் மூர்த்தி,உறுப்பினர்கள், பாரத விலாஸ் கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், ராஜு, பிரகாஷ், பொறியாளர் ரியாஷ் கான், பர்வின் பானு, அசோக் ,தினேஷ், பொறியாளர் கண்ணன்,முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இப்ராகிம் பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் அலுவலக பெண் பணியாளர்கள், ஆண் தபால்காரர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News