தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும்: அமைச்சர் ரகுபதி

நீதிமன்ற தீர்ப்பு எப்படி வருகிறதோ அதை நடைமுறைப்படுத்த அரசு தயாராக உள்ளது. தடை விதித்தால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது

Update: 2022-01-12 09:45 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளும் சீருடைகளையும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் எம்எல்ஏ டாக்டர் முத்து ராஜா ஆகியோர் வழங்கினர்

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறி முறைப்படி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால் நீதிமன்றத்தில் தடை கோரிய தாக்கலான வழக்கில்  நீதிமன்றம் என்ன  கூறுகிறதோ தைப் பின்பற்றும் நிலைப்பாட்டில் தான் நாங்கள் உள்ளோம். என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.  அதன்படி புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற, இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில்  பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் புத்தாடைகள் வழங்கும் விழாவில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  கலந்துகொண்டு 162 அர்ச்சகர்கள் 361 பூசாரிகள் 105 கோவில் பணியாளர்களுக்கு  புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தடையில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி, அதன்படி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்

இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது இந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அரசின் அட்டார்னி ஜெனரல் தெரிவிப்பார்.இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பு எப்படி வருகிறதோ அதை நடைமுறைப்படுத்தும் இடத்தில்தான் அரசு உள்ளது நீதிமன்றம் தடை விதித்தால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

தமிழக சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகள் மட்டுமே மற்ற பிற மாவட்ட சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகின்றனர் விசாரணை கைதிகள் அனைவரும் அந்த மாவட்ட சிறைகளில் எல்லாம் அடைக்கப்படுகின்றனர்.  குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நானூறு கைதிகள் தான் இருக்க முடியும். விசாரணைக் கைதிகள் இங்கு தங்க வைக்கப்பட்டு தண்டனைகள் மற்றும் பிற மாவட்டத்திற்கு அனுப்பப்படுகின்றனர் என்றார்.

Tags:    

Similar News