புதுக்கோட்டையில் 100 ரூபாய்க்கு ஹெட் போன் வாங்குவதற்காக குவிந்த பொதுமக்கள்

ஒரு நாள் மட்டும் 100 நபர்களுக்கு 650 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஹெட் செட் 100 ரூபாய்க்கு தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

Update: 2022-03-10 14:02 GMT

புதுக்கோட்டையில் 100 ரூபாய்க்கு ஹெட் போன் வாங்குவதற்காக கூட்டமாக குவிந்த பொதுமக்களால் பரபரப்பு.

 புதுக்கோட்டையில் 100 ரூபாய்க்கு ஹெட் போன் வாங்குவதற்காக கூட்டமாக குவிந்த பொதுமக்களால் பரபரப்பு.

புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் செயல்பட்டு வரும்  பர்னிச்சர் கடையில் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஒரு அதிரடி தள்ளுபடி அறிவித்தனர். அதில்  வியாழக்கிழமை  ஒரு நாள் மட்டும் 100 நபர்களுக்கு 650 ரூபாய் மதிப்புள்ள செல்போனில் பயன்படுத்தப்படும் ஹெட் போன் 100 ரூபாய்க்கு தரப்படும் என கடை நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து  காலையே ஹெட்போனை வாங்குவதற்கு இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என கடையின் முன்பு குவிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் அதிக அளவில் கூட்டமாக குவிந்த இளைஞர்களை கட்டுப்படுத்த கடை நிர்வாகம் சார்பில் கதவுகள் அடைக்கப்பட்டு 10  நபர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும்  100 ரூபாய்க்கு ஹெட்போன் வழங்கப்பட்டது.

100 ரூபாய்க்கு ஹெட்போன் வழங்கப்படுகிறது என கேள்விப்பட்ட பலர் கடைகள் முன்பு அதிக அளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் அறிந்த காவல்துறையினர் கடையின் முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் 100 நபர்களுக்கு மேல் இருந்தால் அவர்களை அனுப்பி விட வேண்டும் என கடைக்காரர்களிடம் எடுத்துக் கூறி பின்னர், அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன்களை வாங்குவதற்கு முதியோர்கள் இளைஞர்கள் என பலரும் முண்டியடித்துக் கொண்டு வாங்குவதற்கு முற்பட்டனர்.

Tags:    

Similar News