புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

Update: 2022-01-12 11:03 GMT

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கோட்டாட்சியர் அபிநயா ஆய்வு செய்தார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலமாக இருந்ததால் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையின் படி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது அதன்படி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை நடக்கிறது.

அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது பேரிகார்டு அமைக்கும் பணியும் பார்வையாளர்கள் மாடம் காளைகள் மருத்துவ பரிசோதனை செய்வதற்கான இடம் மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை செய்வதற்கான இடம் ஆகியவை முழுவீச்சில் தயாராகி உள்ளது.

இது குறித்து நேற்று மாலை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா விழா கமிட்டியினர் மற்றும் அந்த ஊர் பகுதி மக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறி முறைப்படி தான் விழா நடத்த வேண்டும். 300 மாடு பிடி வீரர்கள் தான் களத்தில் இருக்க வேண்டும். 150 பேர் தான் பார்வையாளராக இருக்க வேண்டும். வெளியூர் ஆட்கள் வரக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்று அப்போது கூறினார்.

Tags:    

Similar News