ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு புதுக்கோட்டையில் திமுகவினர் கொண்டாட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதையொட்டி புதுக்கோட்டையில் திமுக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2021-05-07 12:15 GMT

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதை கொண்டாடும் விதத்தில் வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அனைத்து திமுக நிர்வாகிகளும் முகக் கவசங்கள் அணிந்து பொது மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கியும் கிருமிநாசினி மருந்துகள் வழங்கியும் திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்



Tags:    

Similar News