பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

.பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Update: 2021-11-24 09:30 GMT

 பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மன்னர் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க கோரி புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தற்போது கல்லூரி மற்றும் பள்ளிகளில் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகளால் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து வரும் சூழ்நிலை இருந்து வருகிறது.இதனை தடுக்கும் விதத்தில் தற்போது தமிழக அரசு அதனை பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

அதேபோல் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை காவல்துறை கைது செய்து கல்லூரிகளுக்கும் சில் வைத்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கல்லூரி மாணவி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக கூறி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திடீரென 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்  கல்லூரி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News