மாதிரி வாக்குப்பதிவு வாகன பிரச்சாரம் தொடக்கம்

Update: 2021-03-26 12:15 GMT

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வுக்காக பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு இயந்திர வாகன பிரச்சாரத்தை புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் புதுக்கோட்டை நகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பெரிய அளவிலான வாக்குப்பதிவு மாதிரி இயந்திர வாகன பிரச்சாரத்தை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். முன்னதாக கலெக்டர் உமாமகேஸ்வரியை நரிக்குறவர்கள் பாசி மாலை அணிவித்து வரவேற்றனர்.

Tags:    

Similar News