புதுக்கோட்டை: அரசுப்பள்ளி வளாகத்துக்குள் மழை நீர் புகுவதை தடுக்க வேண்டும்

மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோயால் மாணவர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது

Update: 2021-12-06 11:45 GMT

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புகுந்த மழை நீர்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அரசுமேல்நிலைப் பள்ளியில் புகாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் குளம் நிரம்பி உபரி நீர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்ததால் மாணவ மாணவிகள் அவதிபடுவதுடன், மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அச்சத்தால் பள்ளிக்கு வருவதற்கே அச்சப்படுகின்றனர்.

இது குறித்து பள்ளி மாணவிகள் கூறுகையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக நல்ல மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில், இன்று அதிகாலையில் புதுக்கோட்டையில் கனமழை பெய்தது. இதனால் பிரகதாம்பாள் குளம் நிரம்பி உபரி நீர் அதிக அளவில் வெளியேறி எங்கள் பள்ளி வளாகத்திற்குள் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது

மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு எங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளதால் நாங்கள் பள்ளிக்கு வருவதற்கே அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் புகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்று மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News