புதுக்கோட்டை எம்எல்ஏ அலுவலகம் : திறந்த அமைச்சர்கள்

புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா அலுவலகத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2021-06-13 13:43 GMT

புதுக்கோட்டையில் எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர்  திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், மாவட்ட பொருளாளர் செந்தில், நகரக் கழகச் செயலாளர் நைனா முகம்மது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News