புதுக்கோட்டை கலெக்டராக கவிதா ராமு பொறுப்பேற்பு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக கவிதா ராமு பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2021-06-17 13:48 GMT

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றக் கொண்ட கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராககவிதா ராமு இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் மாவட்ட வாத்தியார் கவிதா ராமு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், சமூக மாமேதை டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் பிறந்த சிறப்பு வாய்ந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்ற வாய்ப்பு  வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சித் தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேவையான அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

அந்த வகையில் மக்கள் நலத் திட்டங்களை விரைவாக கொண்டு சேர்த்திடும் வகையிலும், பொதுமக்கள் தெரிவிக்கும் நியாயமான கோரிக்கைகள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து அலுவலர்களின் ஒத்துழைப்புடன் தேவையானபணிகள் மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை, மகளிர் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா மேம்பாடு, அருங்காட்சியகம் போன்ற பல்வேறுபணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன்.

இவ்வாறு மாவட்டஆட்சித் தலைவர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News