வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்த நகர காவல் ஆய்வாளர்

உரிய நேரத்தில் தங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்த காவல்துறைக்கு வடமாநில தொழிலாளர்கள் கும்பிட்டு நன்றி தெரிவித்தனர்

Update: 2022-01-09 12:18 GMT

வடமாநில தொழிலாளர்களுக்கு  வாகன உதவி செய்த நகர காவல் ஆய்வாளர் குருநாதன்

ரயில் நிலையம் செல்வதற்காக தவித்துக்கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களை போலீஸ் வாகனம் மூலம் நகர காவல் ஆய்வாளர் குருநாதன் அனுப்பி வைத்து உதவி செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு களையும் அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஒடிசா மாநிலத்திலிருந்து புதுக்கோட்டையில் கட்டுமான பணிக்காக நேற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பேர் தமிழகததில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மீண்டும் தங்களது சொந்த மாநிலத்திற்கு ரயில் மூலம்  செல்ல முடிவு செய்து பயணம் புறப்பட்டனர். 

புதுக்கோட்டை போஸ் நகரில் இருந்து ரயில் நிலையத்திற்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த, நகர காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ரயிலுக்கு இன்னும் சிறிது நேரமே இருப்பதாக கூறினர். இதனால், வட மாநில தொழிலாளர்கள் உரிய நேரத்தில் ரயில்வே நிலையம் செல்ல வேண்டும் என்பதற்காக தங்களது காவல் வாகனம் மூலம் அனுப்பி உதவி செய்தனர்.

உரிய நேரத்தில் தங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்த காவல்துறைக்கு வடமாநில தொழிலாளர்கள் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News