மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது

புதுக்கோட்டையில் கடைகள் அடைக்கப்படவிட்டாலும் மாவட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-09-27 11:01 GMT

மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விவசாயம் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட400 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு 3 புதிய வேளாண் திட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கள்கள் மட்டுமல்லாது எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாடு முழுவதும் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 



அதன்படி, இன்று புதுக்கோட்டையில் கடைகள் அடைக்கப்படாவிட்டாலும், மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.புதிய பேருந்து நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் 400 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News