மக்கள் குறைதீர் கூட்டம்: பயனாளிகளுக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவி வழங்கல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 418 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் வழங்கினர்

Update: 2021-10-11 12:07 GMT

புதுக்கோட்டையில் நடைபெற்ற குரைதீர் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளித்த மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பட்டா மாறுதல் விலையில்லா வீட்டுமனைப் பட்டா,வங்கிக்கடன் உதவி, பசுமைவீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 418 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

இம்மனுக்களின்மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்கள். முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.2.63 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் மூலமாக இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவித் தொகைக்கான காசோலைகளும், ஒருவருக்கு மடக்கு சக்கர நாற்காலியும் மற்றும் குளத்தூர் தாலுகா, மேலப்புதுவயல் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் சாலை விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து, வாரிசுதாரரான அவரது தந்தை சுப்பிரமணியன் என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ், ரூ.1 லட்சம் நிவாரண உதவித்தொகைக்கான காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் ஆட்சியர் கவிதா ராமு, வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் உலகநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  

Tags:    

Similar News