புதுக்கோட்டையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி

சரிவிகித உணவுகளை கொடுத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையைத் தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

Update: 2021-09-22 15:58 GMT

புதுக்கோட்டையில் நடந்த தேசிய ஊட்டச்சத்து வார விழா விழிப்புணர்வு பேரணியில் உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது

புதுக்கோட்டை வட்டாரத்தில் இன்று ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு நடைபெற்ர விழிப்புணர்வு பேரணியை , மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷியாமளா  ஆகியோர்  கலந்து கொண்டு  ஊட்டச்சத்து வார விழா விழிப்புணர்வு பேரணியை தொடக்கி  வைத்தனர்.

பேரணியில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் சீம்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். சரிவிகித உணவுகளை கொடுத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட குழந்தைகள் வளா்ச்சி குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதையொட்டி  ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் துப்புரவு பணியாளர்கள், அலுவலர்கள், மேற்ப்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார திட்ட உதவியாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News