கால்நடைகளை நன்றாக வளர்த்த உரிமையாளர்களுக்கு எம்எல்ஏ முத்துராஜா பரிசளிப்பு

சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா சிறந்த கால்நடைகளை வளர்த்த கால்நடை உரிமையாளருக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்

Update: 2022-01-25 06:45 GMT

புதுக்கோட்டை அருகே சிறப்பாக கால்நடைகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய எம்எல்ஏ முத்துராஜா

கால்நடைகளை சிறந்தமுறையில் வளர்த்த உரிமையாளர்களுக்கு எம்எல்ஏ முத்துராஜா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

தமிழக அரசு சார்பில் கால்நடைகள் வளர்ப்போருக்கு மானிய விலையில் ஆடு ,மாடு, கோழி உள்ளிட்டவைகளை அரசு மானிய விலையில் வழங்குகிறது. மேலும் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கோமாரி நோய் உள்ளிட்டவைகளில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. மேலும் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பாக அரசு வழங்கிய கால்நடைகளை வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கியும் கால்நடை வளர்ப்பு முறை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை, புதுக்கோட்டை மாவட்டம் மாந்தாங்குடி பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை புதுக்கோட்டை எம்எல்ஏ மருத்துவர் முத்துராஜா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

மேலும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா சிறந்த கால்நடைகளை வளர்த்த கால்நடை உரிமையாளருக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார் . இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் அப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கால்நடைகளின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News