மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதுக்கோட்டை எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எம்எல்ஏ முத்துராஜா திடீர் ஆய்வு நடத்தினார்.

Update: 2021-10-12 09:15 GMT

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்,  திடீர் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ முத்துராஜா.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

இதையறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, இன்று காலை புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். மழைநீரை அகற்றுவதற்கு நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுதை அடுத்து, அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழைக்காலம் என்பதால் அதிகளவில் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அதிகரித்துள்ள நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். முறையாக சிகிச்சைகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியிடம் கேட்டறிந்து மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News